ETV Bharat / bharat

தி கிரேட் காமாவிற்கு டூடல் வெளியிட்ட கூகுள்! - உலக அளவில் 20ஆம் நூற்றாண்டில் வெல்ல முடியாத மல்யுத்த வீரர்

உலக அளவில் 20ஆம் நூற்றாண்டில் வெல்ல முடியாத மல்யுத்த வீரர் ‘தி கிரேட் காமா’வின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடல் வெளியிட்டுள்ளது.

தி கிரேட் காமாவிற்கு Doodle வெளியிட்ட கூகுள்!

author img

By

Published : May 22, 2022, 11:26 AM IST

உலக அளவில் பிரபலமான 20ஆம் நூற்றாண்டில் யாராலும் சாய்க்க முடியாத இந்திய மல்யுத்த வீரர் காமாவின் பிறந்தநாள் இன்று (மே. 22) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கூகுள் அதன் பக்கத்தில் காமாவிற்காக டூடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு முக்கியமான நாள் மற்றும் முக்கியமான பிரபலங்களை பெருமைப்படுத்தும் விதமாக டூடல் வெளியிடும் கூகுள் நிறுவனம் இன்று காமாவிற்காக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 1878 இல் பிறந்து உலகம் முழுவதும் யாராலும் வெல்ல முடியாத ஒரு மல்யுத்த வீரர்தான் குலாம் முகமது பக்‌ஷ் பட் ஆவார். இவரை மக்கள் ‘தி கிரேட் காமா’ என்றழைத்தனர். பஞ்சாப்பின் பிரபல பயில்வான் குடும்பத்தில் 1878 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி பிறந்த காமா சிறுவயதிலேயே மல்யுத்தத்தில் சிறந்து விளங்கினார். இதனால் ஜோத்பூர் மன்னனின் பிரியமான மல்யுத்த வீரராக திகழ்ந்தார். மல்யுத்தத்தில் அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து போன்ற நாடுகளின் வீரர்களை எளிதாக வென்றார். இதனால் இவர் பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்பட்டார்.

டூடல் வெளியிட்ட கூகுள்
டூடல் வெளியிட்ட கூகுள்

காமாவின் தாக்குதலுக்கு யாராலும் தாக்கு பிடிக்க முடியாது எனக் கூறப்படுகிறது. இவரை போல் சிறந்த மல்யுத்த வீரர் இவருக்கு பின் இதுவரை பிறக்கவில்லை எனக் கருதப்படுகிறது. மேலும் இவரது கடுமையான பயிற்சி மூலமாகவே இவர் பல சாதனைகளை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவராலும் புகழப்பெற்ற காமாவிற்கு கூகுள் நிறுவனத்தின் சமர்ப்பணம் தான் இந்த டூடல்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பல கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர் - அகில இந்திய செஸ் சம்மேளன செயலாளர் பேட்டி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.