ETV Bharat / bharat

மத்திய பிரதேச சரணாலயத்தில் பிறந்த 72 முதலை குட்டிகள்!!

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள சோன் காரியல் சரணாலயத்தில் 72 முட்டைகளில் இருந்து 72 முதலைகள் பிறந்துள்ளன.

மத்திய பிரதேச சரணாலயத்தில் பிறந்த 72 முதலை குட்டிகள்

author img

By

Published : May 24, 2022, 7:35 PM IST

சித்தி மாவட்டம்(மத்தியப்பிரதேசம்): மத்தியப்பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில் சோன் காரியல் சரணாலயத்தில் 72 முட்டைகளில் இருந்து 72 முதலைகள் பிறந்துள்ளன. அவற்றைக் கண்காணிக்க, 6 சரணாலய ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெண் முதலமைகள் சோன் ஆற்றின் கரையில் உள்ள மணலில் முட்டையிடுகிறது. முட்டைகளைப் பாதுகாக்க,சரணாலய நிர்வாகம் இடம் தயார் செய்தது. இதன்மூலம் முதலைகள் பிறக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லலாம்.

இத்தகைய சூழ்நிலையில், இரண்டு பெண் முதலைகளும் தங்கள் குட்டிகளின் பாதுகாப்பிற்காக முட்டைகளைச் சுற்றி, சுற்றி வருகின்றன. இரு தரப்பிலிருந்தும் கேடயமாக மாறி தனது குட்டிகளைக் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

சிறிய முதலைகளுக்கு இயற்கையாகவே இரண்டு வாரங்களுக்கு உணவு தேவையில்லை. அதன் பிறகு அவர்களுக்கு சிறிய மீன்கள் உணவாக கொடுக்கப்படுகின்றன.

கடந்தாண்டு டிசம்பர் 17இல் ஆண் முதலைகள் கொண்டு வரப்பட்டன. சோன் சரணாலயத்தில் ஆண் முதலைகள் இல்லாததால் முதலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், கடந்தாண்டு, மொரீனாவில் இருந்து ஒரு ஆண் முதலை கொண்டுவரப்பட்டு, அதை கண்காணிக்க ஒரு சிப்பும் நிறுவப்பட்டது.

இதன் மூலம் 5 மாதங்களில் 72 முதலைகள் கிடைத்தன. சஞ்சய் புலிகள் காப்பகத்தின் சிசிஎஃப் ஒய்பி சிங் கூறுகையில், 'சோன் முதலைகள் சரணாலயத்தில் இரண்டு பெண்களின் 72 முட்டைகளில் இருந்து 72 முதலைகள் பிறந்துள்ளன. அவற்றைக் கண்காணிக்க ஊழியர்களுடன் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது’ என்றார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் கோர விபத்து: 8 பேர் உயிரிழப்பு; 26 பேர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.