கர்நாடகா மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று அதிகாலை வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்கத் துறை உதவி ஆணையர் கபில் கதே தலைமையிலான அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது, கேரளாவைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் புலிகூர் முகமது என்பவர் நடத்தையில் சந்தேகமடைந்த அலுவலர்கள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, அபூபக்கர் தனது சாக்ஸில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் கடத்தி வந்த ரூ 24.44 லட்சம் மதிப்புள்ள 504 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அபூக்கர் மீது வழக்குப் பதிவு செய்த சுங்கத்துறையினர்,இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ம.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கரோனா தொற்றாளர்கள் மரணம்!