மங்களூர்: வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியதில், மங்களூர் விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ. 67 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து வந்த இரண்டு பயணிகளிடம் சோதனை மேற்கொண்டதில், கர்நாடக மாநிலம் பட்கல் பகுதியைச் சேர்ந்தவரிடம் தங்கப் பேஸ்ட் அடங்கிய 5 பந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை 641.41 கிராம் தங்கத்தை உள்ளடக்கியிருந்தது.
அதேபோல் கேரள மாநிலம் கசரகோடை சேர்ந்தவரிடம் இருந்து 646. 67 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நபர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒரே கும்பலுடன் தொடர்புடையவர்கள் என வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சந்தேகிக்கிறது.