ETV Bharat / bharat

Today Gold Rate : உச்சம் தொட்ட தங்கம் விலை - விலை உயர்வுக்கு என்ன காரணம் தெரியுமா? - Chennai Gold Rate

சர்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Gold
Gold
author img

By

Published : Apr 5, 2023, 10:49 AM IST

சென்னை : இதுவரை இல்லாத அளவில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 45 ஆயிரத்து 520ஐ தாண்டி புது உச்சம் தொட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் போக்கு காட்டி வருகிறது. தங்க நகைகளுக்கு HUID என்ற 6 இலக்க எண் எழுத்து அடிப்படையிலான ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்பட்டது தான் விலையேற்றத்திற்கான காரணம் எனக் கூறப்பட்டாலும் அது மட்டுமே இந்த விண்ணை முட்டும் அளவிலான விலை உயர்வின் ஆதாரமா என்றால் உண்மை என்று கூற முடியாது.

சர்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல், அமெரிக்காவில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்த நிலை, அதனால் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்க சூழல் உள்ளிட்ட காரணிகள் கூட தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படக் காரணம் என்றும் கூட கூறலாம்.

அமெரிக்காவின் வங்கிகள் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து உள்ளன. அமெரிக்காவின் சிலிகான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் ஆகிய வங்கிகள் திவாலாகின. இரு வங்கிகள் திவாலானதை அடுத்து சுதாரித்துக் கொண்ட அமெரிக்கர்கள் தங்களது முதலீடுகளை வேறு பக்கம் திருப்பி உள்ளனர்.

தங்கத்தின் மீது அதிகப்படியிலான முதலீடுகள் குவியத் தொடங்கிய உள்ளதால் சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ஏற்றம் கண்டு உள்ளது. தற்போதை தங்கம் விலை உயர்வும் முன்னரே கணிக்கப்பட்ட ஒன்று தான். நேற்று (ஏப்.04) சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2020 அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது.

இதன் காரணமாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலை புது உச்சம் தொட்டு உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவாக விலை அதிகரித்து உள்ளது. இன்றைய (ஏப்.5) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 45 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் இன்று விலை உயர்ந்து காணப்பட்டது. வெள்ளி ஒரு கிராமுக்கு 2 ரூபாய் 90 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி 80 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரும் 22ஆம் தேதி அட்சய திருதியை நாள் வர உள்ள நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வரும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பெரும்பாலான வீடுகளில் திருமணங்கள் நடைபெறும் என்ற நிலையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது பெண்களிடையே கலக்கத்தையும் கவலையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : அருணாசல பிரதேச விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா பதில் - இந்தியாவுக்கு ஆதரவா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.