ஆந்திரா: ஏளூர் மாவட்டத்தில் உள்ள பனந்தோப்பில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது பழங்கால தங்க காசுகள் கிடைத்துள்ளது. கடந்த மாதம் 29-ம் தேதி, ஏடுவடபாலம் கிராமம் பகுதியில் தேஜஸ்வி என்பவரது பனை மர தோப்பில் தண்ணீர் பாய்ச்ச குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட போது, தரையில் மண்ணால் ஆன பானை ஒன்று கிடைத்துள்ளது. அதை பார்த்த போது அதில் தங்கக் காசுகள் இருப்பது தெரியவந்தது.
அதன் பின் தேஜஸ்வியின் கணவர் சத்தியநாராயணன் அளித்த தகவலின் பேரில் வந்த தாசில்தார் காசுகள் வைக்கப்பட்டிருந்த மண் பானையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் மொத்தம் 18 தங்க காசுகள் இருந்துள்ளது. ஒவ்வொரு நாணயமும் 8 கிராமுக்கு மேல் எடையிருக்கும் எனவும், இவை 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏ எப்புட்றா... செடியில் காய்த்து தொங்கும் உருளைக்கிழங்குகள்