சென்னை: இந்திய அளவில் #GoBackAmitShah எனும் ட்விட்டர் ஹேஷ்டேக் பரவலாக இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகிறார். விமானம் மூலம் பிற்பகல் 1.40 மணியளவில் சென்னைக்கு வரும் அமித் ஷா, லீலா பேலஸில் தங்குகிறார். பின்னர், 4.25 மணியளவில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப்பணி உள்பட பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கவுள்ளார்.
இச்சூழலில், அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் வாசிகள் #GoBackAmitShah எனும் ஹேஷ்டேக்கை அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர். முன்பு பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகையில், #GoBackModi எனும் ஹேஷ்டேகை ட்விட்டர் வாசிகள் சிதறவிட்டனர். தற்போதும் #GoBackAmitShah உடன் சேர்த்து #GoBackModi ஹேஷ்டேக்கையும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இந்தியளவில் இந்த இரு ஹேஷ்டேக்குகளும் முன்னிலை பெற்றுவருகிறது.
நாட்டின் மிக சக்தி மிகுந்த உள் துறை அமைச்சரான அமித் ஷா, 2021 சட்டப்பேரவை தேர்தல் வியூகம் குறித்தும் முக்கிய தலைவர்களுடன் பேசவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வேளையில், இணையதள வாசிகளின் இந்த ட்ரெண்ட் செட்டிங் போராட்டம், அரசியல் பார்வையாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த ஹேஷ் டேக்குகளுக்குப் போட்டியாக பாஜக தொண்டர்கள் #TNWelcomesAmitShah #TNWelcomesChanakya ஆகிய ஹேஷ்டேக்குகளைக் கொண்ட பதிவுகளை ட்வீட் செய்துவருகின்றனர்.