டெல்லி: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி, கோவாவின் அசாகோவில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்திற்கு இறந்தவரின் பெயரில் உரிமம் பெறப்பட்டதாகவும், மதுபான உரிமையைப் புதுப்பிக்க ஆவணங்கள் கோரப்பட்டதாகவும் சர்ச்சைகள் கிளம்பின.
இதுகுறித்து கோவாவின் கலால் ஆணையர் நாராயண் எம்காட், ஜூலை 21ஆம் தேதி உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதுதொடர்பான வழக்கு ஜூலை 29 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே ‘இந்த விவாகரத்தில் பிரதமர் தலையிட்டு, சட்ட விரோதமாக மகள் பெயரில் மதுப்பானக்கடை (பார்) நடத்தும் அமைச்சர் ஸ்மிருதி ராணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துவந்தது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அதில், “இது காங்கிரஸ் கட்சித் தலைமையின் தூண்டுதலால் ஜோடிக்கப்பட்ட விமர்சனம். என்னுடைய மகள் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. இந்த குற்றச்சாட்டு எனது மகளின் நல்ல குணத்தை படுகொலை செய்வதுபோல் உள்ளது. அதேநேரம் என்னை அரசியல் ரீதியாக கேவலப்படுத்தும் செயலாக உள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதியில் போட்டியிட்டு, ராகுல் காந்தியை தோற்கடிப்பேன். இதுவே என் பதிலடி" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீட்டிற்கு ரூ.10,000 அபராதம்