பனாஜி : கோவா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் பாஜகவில் இருந்து சனிக்கிழமை (ஜன.22) விலகினார்.
இது குறித்து லக்ஷ்மிகாந்த் பர்சேகர் கூறுகையில், “நான் ஒரு நேர்மையான பாஜக தொண்டர். நான் எந்த வளர்ச்சிப் பணிகளைச் செய்தாலும் அது பொதுப் பணத்தில் செய்யப்பட்டதே தவிர என் சட்டைப் பையில் இருந்து செய்யப்பட்டது அல்ல.
ஆனால் இன்று அந்த வளர்ச்சி பணிகள் கிடப்பில் உள்ளன. அதைச் செய்வது என் பொறுப்பு என்று உணர்கிறேன். அவை நிறைவேறவில்லை என்றால், பொதுப் பணம் வீணடிக்கப்படும் என்ற வருத்தம் என் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
UP Assembly Election: புதுக் கூட்டணி அமைத்த அசாதுதீன் ஓவைசி!
எனவே, அந்த வளர்ச்சிப் பணிகளை முடிக்க, நான் ஆட்சியில் கட்சியில் சேர வேண்டியதில்லை. நான் அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ கூட இருக்க வேண்டியதில்லை. அந்த வளர்ச்சிப் பணிகளை என்னால் எம்.எல்.ஏ.வாகவும் செய்து முடிக்க முடியும்” என்றார்.
மேலும், “கடந்த ஐந்தாண்டுகளில் நான் செய்த வளர்ச்சிப் பணிகள் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதன் வருத்தம் என் மனதில் இருக்கிறது. அந்த வளர்ச்சிப் பணிகளை முடிக்க வேண்டும். எனவே இன்று மாலை பாஜகவில் இருந்து விலகி சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளேன்.
Punjab Assembly Polls: கல்லூரி மாணவிகளுக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்!
கோவாவின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர ஃபட்னாவிஸும் நேற்று என்னைச் சந்தித்து என்னை சமாதானப்படுத்தினார். ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன். தயானந்த் சோப்தேவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததற்காக நான் ராஜினாமா செய்யவில்லை. இதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. இந்த முடிவு ஒரே இரவில் எடுக்கப்பட்டதல்ல. இது கடந்த 3-4 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவு” என்றார்.
2017ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற லக்ஷ்மிகாந்த் பர்சேகர், 2019ஆம் ஆண்டு 9 உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைந்தார்.
கோவா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 34 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிப்.14ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது.
ஏற்கனவே பாஜகவில் இருந்து மனோகர் பாரிக்கர் மகன் விலகியுள்ளார். இதற்கிடையில் மற்றொரு முதலமைச்சரும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மனோகர் பாரிக்கர் மகன் தனித்துப் போட்டி!