ETV Bharat / bharat

Go back Chidambaram: கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன? - கொல்கத்தா நீதிமன்றத்தில் ப சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பார்த்து கொல்கத்தா நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு வழக்குரைஞர்கள் Go back Chidambaram (கோ பேக் சிதம்பரம்) எனக் கூறியுள்ளனர்.

CHIDAMBARAM
CHIDAMBARAM
author img

By

Published : May 5, 2022, 5:23 PM IST

கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், வழக்கு ஒன்றில் குறுக்கு விசாரணை நடத்த புதன்கிழமை (மே4) கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தொடர்ந்து வழக்கின் விசாரணையை முடித்துக்கொண்டு நீதிமன்றத்தின் 'பி' வாசல் வழியாக வெளியேறினார். அப்போது அவரை சக வழக்குரைஞர்கள் சூழ்ந்து கொண்டு Go back Chidambaram (கோ பேக் சிதம்பரம்) என கோஷமிட்டனர். இது நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

GO BACK SLOGAN FOR P CHIDAMBARAM AT CALCUTTA HIGH COURT PREMISES
Go back Chidambaram: கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன?

இந்த நிலையில் ப.சிதம்பரத்தை மற்ற வழக்குரைஞர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். ப.சிதம்பரத்துக்கு எதிராக Go back Chidambaram எனக் கூறியவர்கள் வழக்குரைஞர்கள் கவுஸ்தவ் பாக்சி மற்றும் சுமித்ரா நியோகி ஆகியோர் எனத் தெரியவந்தது.

இந்த நிலையில் பெண் வழக்குரைஞரான சுமித்ரா நியோகி, “உங்களைப் போன்றவர்களால்தான் காங்கிரஸ் கட்சிக்கு இந்த நிலைமை” என ப.சிதம்பரத்தை பார்த்து கூறினார். மேலும் ப.சிதம்பரத்தின் கார் வரை சென்று அவருக்கு எதிராக கோஷமிட்டார்.

கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக வழக்குரைஞர்கள் கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 2017 Azadi March: குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.