புலாந்த்ஷார் (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலம் ஜஹான்கிராபாத் டவுனைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அன்று வழக்கம் போல கல்லூரியில் இருந்து வீட்டிற்குச் சென்று கொண்டு இருந்து உள்ளார். அப்போது, மாணவிக்கு அறிமுகமான ஒருவர் பைக்கில் வேலை வாங்கித் தருவதாக கூறி மாணவியை அழைத்துச் சென்று உள்ளார்.
பின்னர், மாணவியை காருக்கு மாற்றி உள்ளார். இதனையடுத்து மாணவியை ஓடும் காரில் பாலியல் வன்புணர்வு செய்து உள்ளார். இதற்கு அம்மாணவி மறுப்பு தெரிவித்தபோது, மாணவியை அவர் தாக்கி உள்ளார். அது மட்டுமல்லாமல், மாணவியின் மொபைல் போனை வெளியில் தூக்கி எறிந்து உள்ளார்.
மேலும், மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததை வீடியோவாக பதிவு செய்த அந்த நபர், இது குறித்து காவல் துறையில் தெரிவித்தால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி விடுவதாக மிரட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து, மாணவியை அவுரங்கபாத் சாலையில் தள்ளி விட்டு தப்பி ஓடி உள்ளார்.
இந்த நிலையில், மாணவி தனக்கு நேர்ந்ததை உறவினர்களிடம் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த நபரை கைது செய்து உள்ளனர்.
மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக வட்டார அலுவலர் அனுப்சாஹர் அன்விதா உபதய் மற்றும் தேஹாத் பஜ்ரன்பாலி சவுரசியா ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: வேறு ஒரு பெண்ணுடன் ரீல்ஸ் செய்த கணவர்.. விரக்தியில் மனைவி தற்கொலை முயற்சி!