ETV Bharat / bharat

ராஜஸ்தானில் ஆற்றுப்பாலத்தின் கீழ் கிடந்த 185 கிலோ வெடிபொருள்கள் - ராஜஸ்தானில் வெடிபொருள்கள் பறிமுதல்

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள சோம் ஆற்றுப்பாலத்தின் அடியில் 185 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Gelatin sticks found in Rajasthan's Dungarpur

author img

By

Published : Nov 16, 2022, 11:06 AM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள சோம் ஆற்றுப்பாலத்தின் அடியில் 7 மூட்டைகளில் வெடிபொருள்கள் கிடப்பதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் துங்கர்பூர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வெடிப்பொருள்களை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில், உதய்பூர்-அகமதாபாத் ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட வெடி விபத்து நடத்த இடத்தில் இருந்து 70 கிமீ தொலைவில் 185 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாலத்தின் மேல் நடந்துசென்றவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வெடிப்பொருள்களை மீட்டுள்ளோம்.

அவை முற்றிலும் நனைந்துவிட்டன. தேசிய புலனாய்வு முகமை உதய்பூர்-அகமதாபாத் ரயில்வே தண்டவாள வெடிப்பு குறித்து விசாரித்து வருகிறது. அவர்களிடம் இந்த சம்பவம் குறித்த தகவல்களை ஒப்படைக்க உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: குடிபோதையில் மகளை சுட்டு கொன்ற தந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.