ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட மத-அரசியல் அமைப்பான ஜமாத்-இ இஸ்லாமிக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மாநில புலனாய்வு முகமையின் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீநகர் மாவட்ட நீதிபதி முஹம்மது அஜாஸ், அந்த அமைப்பின் தொடர்புடைய நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி அந்த அமைப்பின் தொடர்புடைய ஜிலானியின் சொத்துகள் நேற்று (டிச. 20) உபா சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி பாக்கி ரூ.1,200 கோடிதான்' - மத்திய நிதியமைச்சர்