டெல்லி: தீவு நாடான இலங்கையில், செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து, தலைநகர் டெல்லியில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, அதானி குழும தலைவர் கவுதம் அதானி உடன் ஆலோசனை மேற்கொண்டார்.
"கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி, 500 மெகாவாட் காற்றாலை திட்டம் மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான எங்கள் புதுப்பித்தல் ஆற்றல் நிபுணத்துவத்தை விரிவுபடுத்துதல் உட்பட இலங்கையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் குறித்து விவாதிக்கும் பொருட்டு, இலங்கை அதிபர் ரணிலை சந்தித்து கலந்துரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக, கவுதம் அதானி, ட்விட் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை நாடு உள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரம்சிங்கேவின், இந்திய பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
பன்முகப்படுத்தப்பட்ட அதானி குழுமத்தின் முக்கிய துணை நிறுவனமான அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன்ஸ் லிமிடெட் (APSEZ) நிறுவனம், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மேற்கு கொள்கலன் முனையத்தின் (WCT) மேம்பாடு மற்றும் செயல்பாடுகளுக்காக இலங்கை அதிகாரிகளிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொழும்புவில் உள்ள மேற்கு கொள்கலன் முனையம் (WCT), பொது-தனியார் பங்களிப்பு உடன் இயக்க மற்றும் பரிமாற்ற அடிப்படையில், 35 வருட கால ஒப்பந்தம் உருவாக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில்,. அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன்ஸ் லிமிடெட் (APSEZ) நிறுவனம், இலங்கையின் மிகப் பெரிய பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான John Keells Holdings PLC மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையுடன் (SLPA) இணைந்து செயல்படும்.
இன்று அதிகாலை இலங்கை ஜனாதிபதி . அவர் சந்தித்தார். வியாழன் அன்று . இந்தியாவின் அண்டை நாடுகளின் முதல் கொள்கை மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை ஒரு முக்கிய பங்காளியாக உள்ள நிலையில், இந்தியப் பயணம் மேற்கொண்டு உள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரம்சிங்கே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசினார். பின்னர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.