ETV Bharat / bharat

ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றி! கால தாமதத்திற்கு காரணம் என்ன? - இஸ்ரோ தலைவர் விளக்கம்!

Mission Gaganyaan: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் (Gaganyaan) சோதனையின் டிவி-டி1 சோதனை விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

Etv Bharat
ககன்யான் சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 10:06 AM IST

Updated : Oct 21, 2023, 8:46 PM IST

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று (அக்.21) காலை 8 மணிக்கு, ககன்யான் திட்டத்தின் டிவி-டி1 என்ற சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய இருந்தது.

இவ்வாறு, இன்று காலை 8 மணிக்கு இந்த சோதனை விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரேல் தெரிவித்த நிலையில், தாமதமாக 08.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. இதனால் அரை மணிநேரம் சோதனை தாமதமான நிலையில், மீண்டும் கவுண்ட் டவுன் நிறுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.

இதனையடுத்து 08.45 மணியளவில் விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்ட் டவுன் தயாரானது. இருப்பினும், கடைசி 5 விநாடி இருக்கும்போது, சோதனை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இதனையடுத்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “சில தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக ககன்யான் சோதனை விண்கலத்தின் சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை இஸ்ரோ குழு தீவிரமாக ஆராய்ந்து, அதனை களையும்.

இதனைத் தொடர்ந்து மிக விரைவில் ககன்யான் விண்கலத்தின் சோதனை வெற்றிகரமாக நடைபெறும். உங்களது ஆதரவுக்கு நன்றி” என தெரிவித்தார். இந்த சோதனையில், மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்ல இருந்த சோதனை விண்கலத்தின் (crew module) செயல்பாடு குறித்தும், பாதுகாப்பாக தரை இறங்குதல் குறித்தும் ஆய்வுகள் நடைபெற இருந்தது.

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 திட்டங்களின் வெற்றிக்கு பிறகு இஸ்ரோ ககன்யான் திட்டத்தில் தீவிரமாக இறங்கி இருந்தது. இந்நிலையில் ககன்யான் திட்டத்திற்கான விண்கலன் ஏவப்படுவதற்கு முன்னர் தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், அதை சரிசெய்யும் பணி துரிதமாக நடைபெற்றது.

இந்நிலையில் ககன்யான் சோதனை விண்கலன் மீண்டும் 10 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்து இருந்தது. இந்நிலையில் ககன்யான் சோதனை விண்கலன் 10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர் திட்டமிடப்பட்டது போல், மனிதர்கள் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கலன், விண்கலனில் இருந்து பிரிந்தது.

பிரிந்த விண்கலன் சிறிது தூரத்திற்கு சென்ற பின்னர் அதிலிருந்த பாராசூட்கள் விரிந்து, கலன் திட்டமிட்டட்ட படி வங்காள விரிகுடாவில் விழுவதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் திட்டமிட்டபடி ககன்யான் திட்டத்தின் சோதனை கலன் வங்காள விரிகுடாவில் விழுந்தது.

இதனையடுத்து, ககன்யான் திட்டத்தின் வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டாடினர். ககன்யான் திட்டத்தின் சோதனை வெற்றிகரமாக நடந்தது குறித்து இஸ்ரோ அதன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “ககன்யான் மிஷன் டிவி டி-1 திட்டமிட்டபடி செயல்பட்டது. க்ரூ எஸ்கேப் சிஸ்டம் திட்டமிட்டபடி செயல்பட்டது” என பதிவிட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தின் சோதனை வெற்றிபெற்றதையடுத்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “டிவி-டி1 திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ககன்யான் திட்டத்திற்கான க்ரூ எஸ்கேப் சிஸ்டம் சோதனை செய்வதே இந்த பணியின் நோக்கமாகும். க்ரூ எஸ்கேப் சிஸ்டம், க்ரூ மாட்யூலை விண்கலத்திலிருந்து எடுத்துச் சென்று, அடுத்தடுத்த செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வெற்றிகரமாக கடலில் விழுந்தது. முன்னதாக வானிலை காரணமாக விண்கலனை ஏவுவதற்கு தாமதம் ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.

  • #WATCH | Sriharikota: ISRO Chief S Somanath says, "I am very happy to announce the successful accomplishment of the TV-D1 mission. The purpose of this mission was to demonstrate the crew escape system for the Gaganyaan program through a test vehicle demonstration in which the… pic.twitter.com/P34IpyPeVU

    — ANI (@ANI) October 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இஸ்ரோவின் சந்திரயான் - 3, ஆதித்யா எல்-1 வெற்றியை அடுத்து ககன்யான் திட்டமும் வெற்றியடைந்ததற்கு பொதுமக்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ககன்யான் முதல் கட்ட சோதனை முயற்சி வெற்றி அடைந்தது உள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "ககன்யான் முதல் கட்ட சோதனை முயற்சி வெற்றி அடைந்தது உள்ளது.

ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம், அதன் சரியான இலக்கினை எட்டியது. பின்னர் தரை இறங்கிய ககன்யான் சோதனையோட்டம் சரியான இடத்தை வந்தடைந்தது. அடுத்த கட்ட சோதனை முயற்சி படிப்படியாக, அடுத்த கட்ட இலக்கினை அடையும் பணி தொடர்ந்து செயல்ப்படுத்தப்படும்.

பருவ நிலை மாற்றம் காரணமாக காலை ககன்யான் சோதனை முயற்சியில் காலதாமதம் ஏற்பட்டது. பருவ மாற்றம் காரணமாக சோதனை ஓட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் சரியானதும் ககன்யான் முதல் கட்ட சோதனை முயற்சி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கனவுத் திட்டம்.. நாளை நடக்கவிருக்கும் சோதனைகள் குறித்த முழு விவரம்!

Last Updated : Oct 21, 2023, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.