ETV Bharat / bharat

ராஞ்சியில் 2 நாட்கள் ஜி20 பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்

ராஞ்சியில் நாளை முதல் இரண்டு நாட்கள் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ராஞ்சி வந்தடைந்தனர்.

author img

By

Published : Mar 1, 2023, 10:32 PM IST

ராஞ்சியில் ஜி20 பிரதிநிதிகள் கூட்டம்
ராஞ்சியில் ஜி20 பிரதிநிதிகள் கூட்டம்

ராஞ்சி: இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள அமைப்பு ஜி20. இந்த அமைப்பின் உச்சி மாநாடு கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்றது. இம்மாநாட்டை நடப்பாண்டில் நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில், ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. அதே வேளையில், இதுதொடர்பாக 200 கூட்டங்களை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நாளை முதல் 2 நாட்கள், ஜி20 பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜி20 அமைப்பில் இடம்பெறாத நாடுகளின் துறை சார் வல்லுநர்களும் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ராஞ்சிக்கு வந்துள்ளனர்.

"நிலையான ஆற்றலுக்கான பொருட்கள்" என்ற தலைப்பில், 2 நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மின்சாதனப் பொருட்கள் மற்றும் கருவிகள், சூரிய சக்தி மற்றும் அது சார்ந்த உபகரணங்கள், பசுமை ஆற்றலுக்கான செயல்முறைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. வருங்காலத்துக்கான மின் சேமிப்பு மற்றும் அது சார்ந்த அறிவியல் பரிமாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டத்தில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த 25 பிரதிநிதிகள், சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுத்த காதலியை 15 முறை கத்தியால் குத்திய காதலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.