ETV Bharat / bharat

69-வது தேசிய விருது.. விருதுபெற்ற படங்கள் என்னென்ன?

69th national awards: நாட்டின் 69-வது தேசிய விருது பெறும் படங்களின் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. RRR, கங்குபாய் கத்யாவாடி, ராக்கெட்ரி, போன்ற படங்கள் விருதுகளை பெற்று உள்ளன.

69-வது தேசிய விருது
69th national awards
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 6:22 PM IST

Updated : Aug 24, 2023, 7:56 PM IST

ஹைதராபாத்: 2021ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 69-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படங்களுக்கான விருது, தமிழ் படத்திற்கான விருதை 'கடைசி விவசாயி' படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அப்படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த பெண் பாடகருக்கான விருது, "இரவின் நிழல்" படத்தின் மாயவா சாயவா படலுக்காக பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு (Shreya Ghoshal) அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விருது பெறும் படங்களில் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரம்மாண்ட திரைப்பட இயக்குநர் ராஜமௌலி இயக்கிய RRR படம், சிறந்த முழு நேர பொழுதுபோக்கு படத்திறகான விருது, சிறந்த கிராஃபிக்ஸ்கான விருது, சிறந்த நடனத்திற்கான விருது, சிறந்த பின்னணி இசைக்கான விருது உட்பட ஆறு விருதுகளை குவித்துள்ளது.

தொடர்ந்து சிறந்த நடிகருக்கான விருதை 'புஷ்பா' படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு (Allu Arjun) அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜத் கமல் விருதுடன் 50,000 ரூபாய் ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிறந்த இசைக்கான விருதை 'புஷ்பா' படத்திற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பெற்றுள்ளர். குறிப்பாக இந்த விருதை RRR இசையமைப்பாளர் கீரவாணியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு, (Alia Bhatt) 'கங்குபாய் கத்யாவாடி' (Gangubai Kathiawadi) படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்க்கு சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும், சிறந்த திரைக்கதைக்கான விருதும், சிறந்த வசனங்களுக்கான விருதும் மற்றும் சிறந்த ஒப்பனை அலங்காரத்திற்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பரம சுந்தரி என்னும் பிரபல பாடல் இடம் பெற்ற 'மிமி' (Mimi) படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது கீர்த்தி சனோனுக்கும் (Kriti Sanon) அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை கீர்த்தி சனோன் மற்றும் ஆலியா பட் இருவரும் பகிர்ந்து கொள்வார்கள்.

நடிகர் மாதவன் தயாரித்து இயக்கிய ராக்கெட்ரி படம் (Rocketry: The Nambi effect) படம் சிறந்த ஹிந்தி படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வர்ண கமல் விருதும் 2,50,000 ரொக்கமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. நடிகர் மாதவன் இயக்கிய முதல் படமான ராக்கெட்ரி தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஷேர்ஷா (Shershaah) படத்திற்கான சிறப்பு விருது இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜத் கமல் விருதும், 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. இயக்குநர் விஷ்ணுவர்தன் தமிழ் திரைப்பட இயக்குநர் என்பதும், தமிழ் பில்லா, ஆரம்பம், சர்வம், பட்டியல் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த தமிழ் படமாக 'கடைசி விவசாயி' படத்திற்க்கும், சிறந்த கன்னட படத்திற்காக '777 சார்லி' (777Charlie) படத்திற்க்கும், சிறந்த மலையாள படத்திற்காக 'ஹோம்' (Home) படத்திற்க்கும், சிறந்த தெலுங்கு படமாக 'உப்பென்னா' (Uppena) படத்திற்க்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மியூசிக் அகாடமி தொடங்குவதற்காக டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன் - ஹிப் ஹாப் ஆதி

Last Updated : Aug 24, 2023, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.