ஹைதராபாத்: டெல்லியில் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டா, 3.2 கிலோ மீட்டர் அளவிலான பரப்பைக் கொண்டுள்ளது. இதில் ராஷ்டிரபதி பவன், நாடாளுமன்ற கட்டடம், வடக்கு மற்றும் தெற்கு கட்டடங்கள் மற்றும் இந்தியா கேட் ஆகியவை உள்ளன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் அனைத்தும் 1931ஆம் ஆண்டுக்கு முன்னால், அதாவது நாட்டின் தலைநகரமாக டெல்லி உருவாதற்கு முன்னால் அமைந்தவை.
இவ்வாறு கலை நுட்பங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பைக் கொண்டுள்ள சென்ட்ரல் விஸ்டாவின் பழமை மாறாமல் புதுப்பிப்பதே அதன் முதன்மை குறிக்கோளாக அமைந்தது. இந்த திட்டத்தில், மக்களவை கட்டடம், பழைய மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டடங்கள், நாடாளுமன்ற நூலகம் மற்றும் மக்களவை உறுப்பினர்களின் சேம்பர்கள் ஆகியவை அடங்கும்.
கார்தவ்ய பாத்: ராஜ்பத் என்று அழைக்கப்படக் கூடிய கார்தவ்ய பாத் என்பது, வைஸ்ராய் இல்லம் மற்றும் பிரிட்டிஷ் ராஜின் நினைவுச் சின்னத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த கட்டடமானது வாஷிங்டனில் உள்ள நேஷ்னல் மால் மற்றும் பாரிஸில் உள்ள அவென்யூ டி சாம்ப்ஸ் - எலிசீஸை அடிப்படையாகக் கொண்டது. மரங்கள் நிறைந்த வரிசைகள், முறைப்படுத்தப்பட்ட தோட்டம், நீர் வழிகள் ஆகியவை 3 கிலோ மீட்டர் அளவிற்கு அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
இதற்கான முன்னோட்டமானது நகர திட்டமிடல் கொள்கைகளின் கீழ் ராசினா மலையில் இருந்து யமுனா நதி வரை நீண்டு முதன்மையான பகுதிகளை உள்ளடக்கியது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ராஜாவின் பாதை ராஜ்பாத் என்று அழைக்கப்பட்ட நிலையில், தற்போது கார்தவ்ய பாத் என அழைக்கப்படுகிறது. அதேநேரம், ராணியின் பாதை ஜான்பாத் என அறியப்படுகிறது.
அதேபோல், வைஸ்ராய் இல்லம் ராஷ்டிரபதி பவன் ஆகவும், அனைத்திந்திய போர் நினைவகம் இந்தியா கேட் என்றும் இந்திய ஜனநாயகத்தின் சின்னங்களாக பிரதிபலிக்கின்றன. சுதந்திரத்துக்கு பிறகு கார்தவ்யா பாத் பல மாற்றங்களைச் சந்தித்தது. முக்கியமாக போக்குவரத்து நெரிசல் காரணமாக ரஃபீ அகமது கித்வாய் மார்க் என்ற குறுக்குத் தெரு வடக்கு - தெற்கு பகுதிகளை இணைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1980களில் உருவாக்கப்பட்ட புதிய வரிசையில் அமைக்கப்பட்ட மரங்களால், நீர் வழிகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட தோட்டம் ஆகியவை தளர்த்தப்பட்டன. இருப்பினும், குடியரசு தினம், தேசிய மற்றும் பொது நிகழ்ச்சிகள், உள்ளூர் தோட்டங்கள் ஆகியவற்றால் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த வண்ணமே இருக்கின்றன.
பொதுச் செயலகம்: சென்ட்ரல் விஸ்டாவில் தற்போது 39 அமைச்சகங்களும், சென்ட்ரல் விஸ்டாவுக்கு வெளியில் தோராயமாக 12 அமைச்சகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் 51 அமைச்சகங்களும் ஒரே இடத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. போதுமான இட வசதிகளுடன் கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக இதன் திட்டமிடலில் தெரிவிக்கப்பட்டது.
சென்ட்ரல் விஸ்டாவுக்கு வெளியில் 54 ஆயிரம் நபர்கள், அதாவது நிகழ்கால மற்றும் எதிர்கால அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இவை அனைத்தும் திட்டமிடப்பட்டன. பல்வேறு தேவைகளுக்காக மக்கள் நடமாடுவதற்கு உத்வேக பாதைகளானது அனைத்து அலுவலக இணைப்பிலும் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய தலைமையக அலுவலகத்திற்கு வெளியே உத்யோக் பவன், நிர்மன் பவன், கிருஷி பவன், சாஸ்திரி பவன், ஐஜிஎன்சிஏ, தேசிய அருங்காட்சியகம், குடியரசு துணைத் தலைவர் மாளிகை ஆகியவையும், ராஜ்பத்தும் புதிய கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்படுகின்றன. இவை தவிர 2 ஹெக்டேர் பரப்பளவில் பசுமை பொது வெளியும் அமைக்கப்பட்டுள்ளது.
நிர்வாக இடங்கள்: தெற்கு கட்டடத்திற்கு பின்னால் இருக்கும் புதிய கட்டடத்தில் உள்ள 36 மற்றும் 38 ஆகிய பிளாட்களில் பிரதமரின் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான வலுவான பாதுகாப்பு அரணை பிரதமரின் பாதுகாப்பு உயர் அலுவலர்கள் மேற்கொண்டனர். இது மட்டுமல்லாமல், கேபினட் செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் வெளியுறத் துறையின் ஹைதராபாத் இல்லத்தின் கூட்டரங்கம் ஆகியவை பிரதமரின் அலுவலகத்திற்கு அருகில் அமைந்திருக்கும்.
குடியிருப்புகள் மாற்றம்: 2ஆம் உலகப் போரின்போது ராணுவத்திற்காக அமைக்கப்பட்ட குடியிருப்புகள், தற்போது புதிய கட்டடத்தின் எல், எம், ஏ, பி ஆகிய பிளாக்குகளையும், 36 மற்றும் 38 ஆகிய பிளாட்களையும், அதேபோல் மற்ற அமைச்சகங்களின் குடியிருப்புகள் ஜாம்நகர் இல்லத்திலும் என சென்ட்ரல் விஸ்டாவின் 90 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
தற்போது இரண்டு பாதுகாப்பு அலுவலக வளாகங்கள் கஸ்தூர்பா காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்கா அவென்யூவ்ல் இயங்க உள்ளது. 10 சதவீதத்திற்கும் குறைவான குடியிருப்புகள் மத்திய அமைச்சகங்கள் அல்லது துறைகளின் அலுவலகங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் ஜோத்பூர் இல்லத்தில் இருக்கும் இட வசதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA): இந்திரா காந்தி தேசிய கலை மையம் என்பது, கலாச்சாரத் துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற ஒரு நிறுவனம் ஆகும். 1986ஆம் ஆண்டு கட்டடக் கலைஞர் ரால்ப் லெர்னெரின் 190 மாதிரிகளில் இருந்து ஒரு மாதிரியானது தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டபட்டது. ஆனால், இதன் மூலம் நூலக கட்டடம் மட்டும் கட்டப்பட்டன.
ஐஜிஎன்சிஏவின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து வைத்துள்ள நூலக கட்டடமானது, தேவையான இட வசதி, தொழில்நுட்பத்துக்கு ஏற்ற பகுதிகள், ஆவண அறைகள், சேமிப்பு மற்றும் போதுமான இட வசதிகளைப் பெற்றிருக்கவில்லை. இருப்பினும், புதிய கட்டடத்தில் இதற்கான அனைத்து வசதிகளும் நவீனமயமாக்கப்பட்டு கண்காட்சி, நிகழ்ச்சிகள், நிர்வாகம் மற்றும் கல்வி ஆகிய அனைத்திற்கும் ஒருங்கிணைந்த ஒன்றாக இருக்கும்.
தேசிய அருங்காட்சியகம்: புதிய கட்டடத்தில் வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகளுக்கு மாற்றம் செய்யப்படும் தேசிய அருங்காட்சியகத்தால் நாட்டின் உயர் பாரம்பரியம் மற்றும் நிலையான வாழ்க்கை முறை ஆகியவை காட்சிப்படுத்தப்படும். இதன் மத்திய பகுதியில் பொது நிகழ்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கும் வண்ணம் அருங்காட்சியகத்தை மாற்றி அமைக்கும்.
தேசிய ஆவணங்கள்: இந்தியாவின் தேசிய ஆவணங்கள் என்பது தெற்கசியாவின் மிகப்பெரிய ஆவணங்கள் ஆகும். 1926ஆம் ஆண்டில் லூடெய்ன்ஸால் வடிவமைக்கப்பட்ட இந்த பாரமபரிய கட்டடமானது, பல முறைகளில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. ஆனால், போதுமான இட வசதி மற்றும் தொழில்நுட்ப வசதி இல்லாததை பரிந்துரைத்த கலாச்சாரத் துறை, நாட்டின் பாரம்பரிய ஆவணங்களைப் பாதுகாக்க புதிய திட்டத்தை வகுத்தது. இதன்படி, அனைத்து ஆவணங்கள், கையெழுத்து பிரதிகள் மற்றும் அச்சுகள் ஆகியவை பழைய ஆவண கட்டடத்தில் இருந்து பாதுகாப்பாக பழமை மாறாமல் புதிய கட்டடத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
குடியரசுத் துணைத் தலைவர் இல்லம்: மவுலானா அசாத் சாலையில் உள்ள குடியரசு துணைத் தலைவரின் இல்லம், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் வடக்கு பிளாக்கில் இருக்கும் எல் மற்றும் எம் பிளாக்கில் மாற்றம் செய்யப்படுகிறது. அதிகமான இட வசதி, அலுவலகம் மற்றும் தனிமனித சுதந்திரம் ஆகியவற்றுடன் பலகட்ட பாதுகாப்பும் அளிக்கப்ப்டுகிறது.
பிரதமர் இல்லம்: லோக் கல்யாண் மார்க்கில் (சென்ட்ரல் விஸ்டாவுக்கு வெள்யே) அமைந்துள்ல பிரதமரின் இல்லம், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் தெற்கு பிளாக்கில் இருக்கும் ஏ மற்றும் பி பிளாக்கில் மாற்றப்படும். உயர்தர வசதிகளுடன் இந்த குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பிளாட் எண் 30இல் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அனைத்து அலுவலர்களுக்கும் ஒரே இடத்தில் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளை உருவாக்குவதம் மூலம் நகர போக்குவரத்தை சீர் செய்ய முடியும்.
நியூ இந்தியா தோட்டம்: யமுனா நதிக்கு அருகில் அமைந்துள்ள நியூ இந்தியா தோட்டம், தற்போதுள்ள மத்திய விஸ்டாவை 2.24 கிலோ மீட்டர் வரை நீட்டிக்கும். புரானா கிலாவைக் கடந்து செல்லும் பிரத்யேக நடைபாதையாக மாறும் நிலையில், இந்த தோட்டத்தில் 75 வகையான இனங்களை உள்ளடக்கிய 2,022 மரங்கள் நடப்படும். 25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தத் திட்டம் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும் மற்றும் ஒரு சின்னமாக் அமையும்.
தேசிய பல்லுயிர் காப்பகம்: 50 ஏக்கர் பரப்பளவிலான பொதுப்பூங்கா என்னும் தேசிய பல்லுயிர் காப்பகம் குடியரசுத் தலைவரின் தோட்டத்தில் உள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் அதிகமான தாவர வகைகள் பாதுகாக்கப்படுகிறது. இந்த காப்பகமானது அறிவியலாளர்கள், சூழலியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு நாட்டின் பசுமை தரத்தை ஆவணப்படுத்தும் மையமாக விளங்கும். இது தற்போது அன்னை தெரசா கிரெசெண்ட் சாலைக்கு அருகில் அமையும்.
இதையும் படிங்க: Parliament: புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறப்பு.. பழைய நாடாளுமன்ற கட்டடம் என்ன ஆகும்?