புதுச்சேரி மாநிலத்தில் கரோன கட்டுபடுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று கவர்னர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆளுநர் தமிழிசை தலைமை தாங்கினார். கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் அருண், மாவட்ட ஆட்சியர் பூர்வாகார்க் மற்றும் அரசு துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், “ புதுச்சேரியில் வரும் 23ஆம் தேதி வெள்ளி கிழமை இரவு முதல் தொடங்கி மற்றும் திங்கள்கிழமை காலைவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 2 மணிவரை மட்டுமே கடைகள், உணவு விடுதிகள் இயக்க அனுமதி. 2 மணிக்கு மேல் பார்சலுக்கு அனுமதி.
வழிபாட்டு தலங்களில் ஊர்வலங்கள், தேரோட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.