கடந்த ஓராண்டு காலமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்துவந்தவர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சத்யேந்திர மிஸ்ரா. பந்தேல்கண்ட் பகுதியில் உள்ள மக்களுக்கு அவர் சிகிச்சை அளித்துவருகிறார். இந்தநிலையில், அவருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் போபாலிலிருந்து ஹைதராபாத்திற்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டார். அவரது நுரையீரல் 80 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்யேந்திர மிஸ்ராவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் அவருடன் பணிபுரிந்துவரும் மருத்துவர்கள் தகவல் வெளியிட்டிருந்தனர். மேலும், மருத்துவரைத் காப்பாற்றும்படி பொதுமக்களுக்கு அவர்கள் வேண்டுகோள்விடுத்திருந்தனர். அவருக்கு உரிய உதவி அளிக்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.