டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இரண்டு லட்சத்து 82 ஆயிரத்து 970 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 18 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தம் எட்டாயிரத்து 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவால் 441 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 87 ஆயிரத்து 202 ஆக உள்ளது.
நாட்டில் தற்போது 18 லட்சத்து 31 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 58 லட்சத்து 83 ஆயிரத்து 039 ஆக உள்ளது. இதுவரை 158.88 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் நேற்று (ஜன 19) மட்டும் 76 லட்சத்து 35 ஆயிரத்து 229 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: Uttar pradesh election 2022: அகிலேஷ் உடன் நோ டீல் - தனித்து களமிறங்கும் ஆசாத்தின் 'பீம் ஆர்மி'