ETV Bharat / bharat

பிரான்ஸ் அதிபர் தேர்தல் - புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில், புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு
புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு
author img

By

Published : Apr 11, 2022, 9:56 AM IST

புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 10) நடைபெற்றது. அதிபர் பதவிக்கு 12 பேர் போட்டியிட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 4,600-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

புதுச்சேரி கடற்கரைசாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் பிரெஞ்சு பள்ளி (லிசேபிரான்சே) ஆகிய இடங்களில் 2 வாக்குச்சாவடிகளும், காரைக்காலில் ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை பிரெஞ்சு துணை தூதரகம் செய்திருந்தது.

நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் வேட்பாளர்கள் பெரும்பான்மையான வாக்குகளை பெறாவிட்டால், அதில் அதிக வாக்குகள் பெற்ற முதல் 2 வேட்பாளர்களுக்கு இடையே வரும் 24ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது; மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.