டெல்லி : பெகாசஸ் விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விவாதிக்கக் கூறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கிவருகின்றன.
இந்நிலையில் பெகாசஸ் மென்பொருள் வாயிலாக உளவு பார்க்கப்பட்டது உண்மைதான் என பிரான்ஸ் அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் இணைய பாதுகாப்பு நிறுவனமான ஏஎன்எஸ்எஸ்ஐ (ANSSI) விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் அந்நாட்டின் மீடியாபார்ட் (Mediapart) இணைய ஊடகத்தின் இரு செய்தியாளர்கள் வேவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் தனியாருக்கு சொந்தமான பெகாசஸ் மென்பொருள் செயலி வாயிலாக ஒன்றிய அமைச்சர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என 300 பேர் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக பட்டியல் வெளியாகியுள்ளது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : டெலிபோன் ஒட்டுக்கேட்பு- நீதி விசாரணை கோரும் காங்கிரஸ்!