ஃபிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-ஒய்வ்ஸ் லி டிரையன், மூன்று நாள் பயணமாக ஏப்ரல் 13ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இந்தியா வந்தார். இந்நிலையில், பயணத்தின் இறுதி நாளான இன்று (ஏப்ரல் 15) பெங்களூரு செல்லவுள்ளார்.
அங்கு பெங்களூரு லைஃப் சயின்சஸ் கிளஸ்டர் (பி.எல்.எஸ்.சி.), இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மையம் ஆகியவற்றைப் பார்வையிட உள்ளார். தொடர்ந்து, ஃபிரான்ஸ் முதலீட்டாளர்களுக்குச் சிறந்த இடம் என்பதை, இந்திய வணிகக் குழுக்களின் முதலீட்டாளர்களுக்கும், தலைமை நிர்வாக அலுவலர்களுக்கு எடுத்துரைக்கிறார்.
மேலும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் இந்தோ-ஃபிரான்ஸ் உறவை மேலும் வலுப்படுத்த இந்திய, பிரெஞ்சு தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார்.
இரு நாடுகளிலும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கிடையேயான உறவுகளை வளர்ப்பதற்கான புதிய திட்டங்களை லி டிரையன் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்கும் - பிரதமர் மோடி உறுதி