டெல்லி: இந்தியாவிலிருந்து உக்ரைனில் சிக்கிக்கொண்ட மக்களைக் கூட்டிவருவதற்காக அனுப்பப்பட்ட நான்காவது விமானம் ரோமானியா நாட்டிலிருந்து புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இன்று(பிப்.27) தெரிவித்தார்.
ஆப்ரேஷன் கங்கா:
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆப்ரேஷன் கங்கா (Operation ganga) தொடரப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 198 பேர் பாதுகாப்பாக நான்காவது விமானத்தில் ரோமானியா நாட்டிலிருந்து புறப்பட்டனர்' எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்பு அவர் தனது ட்வீட்டில் மூன்றாவது விமானம் 240 இந்தியர்களுடன் ஹங்கேரியிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.
உக்ரைன் - ரஷ்யப்போர் நெருக்கடிகளுக்கு மத்தியில், உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் எல்லைப் பகுதிகளுக்கு அரசாங்கத்தின் துணையின்றி போவதைத் தவிர்க்குமாறு இந்தியத் தூதரகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை, 469 இந்திய குடிமக்கள் உக்ரைனை காலி செய்துள்ளனர். அதில் 250 பேர் டெல்லியில் இன்று(பிப்.27) காலையிலும், 219 பேர் மும்பையில் நேற்று(பிப்.26) மாலையிலும் வந்து சேர்ந்தனர்.
மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் வரை அவர்களை உக்ரைனின் மேற்கு நகரங்களில் தங்கிக்கொள்ளுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில், அங்கு உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படைத் தேவைகள் சுலபமாகவும் சுற்றுவட்டாரப் பாதுகாப்பும் கிடைப்பதனால் அதை இந்தியத்தூதரகம் உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க:நாடு திரும்பிய தமிழ்நாட்டு மாணவர்கள்: விமான நிலையத்தில் அரசு சார்பில் வரவேற்பு