குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள கேபிள் பாலம் நேற்று (அக் 30) மாலை அறுந்து விழுந்தது. இதில் இதுவரை 135 பேர் உயிரிழந்தனர். மேலும் பாலத்தின் அடியில் ஓடிக் கொண்டிருக்கும் மாச்சு ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இவ்விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரில் இருவர் மட்டுமே உயிருடன் உள்ளனர். மோர்பி நகரின் உமா டவுண்ஷிப்பில் உள்ள ஹர்திக் ஃபால்டு - மிரால்பென் தம்பதி, அவர்களது மகன் ஜியான்ஷ் (4), ஜியான்ஷின் மாமா ஹர்ஷ் ஜலவாடியா மற்றும் ஹர்ஷின் மனைவி ஆகிய ஐந்து பேர் நேற்று மாலை கேபிள் பாலத்திற்கு வந்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் இருந்து நான்கு வயது குழந்தை ஜியான்ஷ் மற்றும் அவரது மாமா ஹர்ஷ் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். அதிலும் மாமா ஹர்ஷ் படுகாயமடைந்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பெற்றோர் மற்றும் தனது அத்தையை இழந்த குழந்தை ஜியான்ஷை, மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஜியான்ஷின் பெற்றோரின் இறுதிச்சடங்கு ஹல்வாத் நகரில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: குஜராத் மோர்பி பாலம் அறுந்து விழுந்த காட்சி....