பெங்களூரு: பெங்களூரு அனேகல் தாலுகாவில் உள்ள அட்டிபலே - சர்ஜாப்பூர் சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஜி.ஆர் கலாச்சார குடியிருப்பில் திறப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த திறப்பு விழாவிற்காக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது பந்தல் போட்டு கொண்டியிருந்த தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்; ஆறு பேர் படுகாயமடைந்தார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
படுகாயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரியர் தேர்வு ரத்து உத்தரவை ஏற்க இயலாது- சென்னை உயர் நீதிமன்றம்