கோழிக்கோடு: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உத்தரப்பிரதேசத்தைை சேர்ந்த நான்கு பேரை கோழிக்கோடு போலீசார் இன்று(செப்-24) கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வாரணாசியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தபோது அந்த நான்கு பேரும் அச்சிறுமியுடன் நட்பு வைத்து பாலக்காடுக்கு அழைத்து வந்துள்ளனர்.
பின்னர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்று அச்சிறுமியை நான்கு பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் சிறுமியை விட்டு சென்றனர். கேரள போலீஸ் எஸ்.ஐ. அபர்ணா கோழிக்கோடு பிளாட்பாரத்தில் சிறுமி அழுது கொண்டிருந்ததை கண்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் அந்த சிறுமி நடந்த கொடூரத்தை போலீசாரிடம் கூறியதால் கசாபா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த வாலிபர்களை கண்காணித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இக்ரார் ஆலம், அஜாஜ், இர்ஷாத் மற்றும் ஷகீல் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்... பள்ளி மாணவனின் தற்கொலை கடிதம்...