ஒடிசா மாநிலத்தில் சக ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக, நான்கு பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது மட்டுமின்றி, 20 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை தீர்ப்பை உள்ளூர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கிடைத்த தகவலின்படி, 2019ஆம் ஆண்டு, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களும், அப்பெண்ணும் மகேஸ்வரத்தில் ஒரு செங்கல் சூளையில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள், இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற பெண்ணை, பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
அப்பெண்ணை, தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அப்பெண் மகேஸ்வரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று, இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் - ஒருவர் கைது