சண்டிகர்: ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள ஷாம்தி கிராமத்தில் போலி மதுபானம் அருந்திய 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சோனிபட் டிஎஸ்பி முகேஷ் குமார் கூறுகையில், "உயிரிழந்தவர்கள் சுரேந்திரா (35), சுனில் (30), அஜய் (31), புட்ஷாம் கிராமத்தைச் சேர்ந்த அனில் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சோனிபட் அரசு மருத்துவமனையில் பண்டி என்பவர் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.
இவர்கள் 5 பேரும் நேற்றிரவு உள்ளூர் மதுபானக்கடையில் மதுவாங்கி அருந்தியுள்ளனர். அதன்பின் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே 3 பேர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த போலி மதுபானத்தை விற்பனை செய்தவரை தனிப்படை அமைத்து தேடிவருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிகாரில் 3 வயது குழந்தையை கொலை செய்து வீட்டில் புதைத்த பெண் கைது