ETV Bharat / bharat

டிஜே பார்ட்டியால் விபரீதம்... ஓடும் காரில் மாடல் அழகி கூட்டுப் பாலியல் வன்புணர்வு... சக மாடல் அழகி செய்த சதி அம்பலம்... - model gangrape in car Kerala

கேரள மாநிலம் கொச்சியில் இளம் மாடல் அழகி ஓடும் காரில் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் காரில் மாடல் அழகி கூட்டுப்பாலியல் வன்புணர்வு

author img

By

Published : Nov 19, 2022, 6:34 PM IST

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் 19 வயது மாடல் அழகியை ஓடும் காரில் வைத்து கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 3 பேரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த சக மாடல் அழகியும் இன்று (நவம்பர் 19) கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து கொச்சி போலீசார் தரப்பில், "கொச்சியின் காக்கநாட்டில் 19 வயது இளம் மாடல் அழகி வசித்துவருகிறார். அவருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு கேரளாவில் வசிக்கும் மற்றொரு மாடல் அழகிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த ராஜஸ்தான் மாடல் அழகி நேற்று முன்தினம் (நவம்பர் 17) கேரள மாடல் அழகியை கொச்சியில் உள்ள கேளிக்கை விடுதிக்கு டிஜே பார்ட்டிக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது ராஜஸ்தான் மாடல் அழகியின் நண்பர்கள் 3 பேர் கேரள மாடல் அழகியிடம் அறிமுகமாகியுள்ளனர்.

அதன்பின் பார்ட்டி முடிந்து வீடு திரும்புகையில் அந்த 3 பேரும் காரில் வைத்து கேரள மாடல் அழகியை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதன்பின் காக்கநாட்டில் உள்ள வீட்டில் விட்டுச்சென்றுள்ளனர். இதையடுத்து கேரள மாடல் அழகி போலீசாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் ராஜஸ்தான் மாடல் அழகி உள்பட 4 பேரையும் கைது செய்தோம்.

முதல்கட்ட விசாரணையில் ராஜஸ்தான் மாடல் அழகி திட்டமிட்டு கேரள மாடல் அழகியை காரில் அனுப்பி வைத்துள்ளதும், அந்த நேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. நான்கு பேர் மீதும் குற்றவியல் சதி, பாலியல் வன்புணர்வு, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மும்பை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தாரா ஷ்ரத்தா? - வெளியான பகீர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.