சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ராஜேந்திர நகரில் ஒரு கும்பல் சிவப்பு மணல் பாம்பை விற்க முயலுவதாக சிவில் லைன்ஸ் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் சிவில் லைன்ஸ் காவல் துறையினர், சைபர் பிரிவு காவல் துறையினர் இணைந்து நடத்திய சோதனையில் ஒரு கும்பல் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கவிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அரியவகை சிவப்பு மணல் பாம்பை கடத்திய கேரள மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேரை சிவில் லைன்ஸ் காவல் துறையினர், சைபர் பிரிவு காவல் துறையினருடன் இணைந்து கைதுசெய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அந்த பாம்பை, ஆந்திராவிலிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகத் தெரியவந்தது. சர்வதேச சந்தையில், பாம்பின் விலை கோடியில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு தலைகளை உடைய இந்தப் பாம்பு, சில மருந்துகள், அழகுசாதனப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. சர்வதேச சந்தையில் இவை கோடிக்கணக்கில் கொள்முதலாகும் என்பதால் இதற்குத் தேவை அதிகமாக இருக்கும் எனக் காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குட்கா, ஹான்ஸ் விற்பனை: விற்பனையாளர் கைது!