ETV Bharat / bharat

புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரில் போலி இணையதளம் - மோசடி கும்பல் கைது

டெல்லி: புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி இணையதளத்தில் மோசடி செய்து வந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இணையதள மோசடி
இணையதள மோசடி
author img

By

Published : Sep 6, 2021, 9:57 AM IST

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹல்திராம் நிறுவனத்திலிருந்து பொருள்கள் பெற்று கடை நடத்த விரும்பியுள்ளார். அதற்காக, அந்நிறுவனத்தை தொடர்புகொள்வதற்காக, இணையதளத்தில் பார்த்தபோது அங்கிருந்த ஹல்திராம் நிறுவனத்தின் டீலரை கண்டறிந்தார்.

அந்த இணையதளத்திலேயே ஒரு தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டது. அப்பெண் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, நிறுவனத்தின் சார்பாக பேசிய நபர், சில படிவங்களை நிரப்ப கூறியுள்ளார். மேலும், ஆவணங்கள் சரிபார்ப்பு, பாதுகாப்பு வைப்பு போன்றவற்றுக்கு பல்வேறு கட்டணங்களைச் செலுத்துமாறு கேட்டுள்ளார்.

இணையவழி மோசடி

இதையடுத்து, அப்பெண் 11.74 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர், சில தினங்களுக்குப் பிறகு 1.6 லட்சம் ரூபாய் கொடுக்கும்படி அப்பெண்ணிடம் கேட்டுள்ளனர். தொடர்ந்து பணம் கேட்டு வருவதை உணர்ந்த அப்பெண்தான் மோசடிக்கு இரையாகிவிட்டதை உணர்ந்தார்.

பின்னர், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். விசாரணையில், ஹல்திராம் பெயரில் ஏராளமான போலி இணையதளங்கள் இயங்குவது கண்டறியப்பட்டது.

கோடி கணக்கில் மோசடி

மேலும், பிரலமான பதஞ்சலி, ஹல்திராம், அமுல் போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளின் போலி இணையதளங்களும் இயக்குவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலி இணையதளங்களை இயக்கி வந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 16 மாநிலங்களில் சுமார் 126 இணைய மோசடி சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், இதுவரை பொதுமக்களிடம் இருந்து 1.1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது. நாடு முழுவதும் ஏராளமான மக்கள் இந்த போலி இணையதளங்களுக்கு பலியாகியுள்ளனர்.

போலீஸ் விசாரணை

இந்த மோசடி கும்பல் 36க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன்கள், பல வங்கிக் கணக்குகள், ஏராளமான போலி சிம் கார்டுகள் ஆகியவை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த மோசடி கும்பல், பெரிய பிராண்டுகளின் டொமைன்களை (Domain) வாங்கி அதனைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மேலும், இதனை இணையதளங்களில் விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்து வந்துள்ளனர். தொடர்ந்து, காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மேட்ரிமோனி இணையதளம் மூலம் பண மோசடி - இரண்டு நைஜீரியர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.