சண்டிகர் : காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சி தொடங்கியுள்ள கேப்டன் அமரீந்தர் சிங், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரை இன்று (நவ.29) சந்தித்து பேசினார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு (2022) நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மனோகர் லால் கட்டார், கேப்டன் அமரீந்தர் சிங் சந்திப்பு முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்றது.
பஞ்சாப் லோக் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகும் நிலையில் கட்டாரை சந்தித்து பேசியுள்ளார் கேப்டன் அமரீந்தர் சிங். இருவரும் சில மணி நேரங்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங், பதவியிறக்கப்பட்ட நிலையில் காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
பஞ்சாப், ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : தாலிபான்களுடன் பேசும் பாஜக, விவசாயிகளிடத்தில் பேச மறுப்பதேன்- காங்கிரஸ்!