ETV Bharat / bharat

வாஜ்பாயின் உறவினர் கரோனாவால் மரணம்! - சத்தீஸ்கரில் கரோனா பாதிப்பு

சத்தீஸ்கர் காங்கிரசின் மூத்த தலைவர் கருணா சுக்லா கோவிட்-19 பாதிப்புக்கு உயிரிழந்துள்ளார்.

Karuna Shukla
Karuna Shukla
author img

By

Published : Apr 27, 2021, 12:21 PM IST

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உறவினர் (niece), காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கருணா சுக்லா கோவிட்-19 பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். 70 வயதான இவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ராமாகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த கருணா சுக்லா, கட்சியில் ஓரங்கட்டப்பட்ட காரணத்தால் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரசில் இணைந்தார்.

2018ஆம் ஆண்டு சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் ரமன் சிங்கை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரது மறைவுக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் அணியுங்கள்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.