ETV Bharat / bharat

நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன; ராஜஸ்தான் முதலமைச்சரை மிரட்டிய முன்னாள் அமைச்சர்! - சிவப்பு டைரி

ராஜஸ்தான் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குதா, அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில் வைத்து முதலமைச்சர் அசோக் கெலாட் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 24, 2023, 9:58 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குதா, முதலமைச்சர் அசோக் கெலாட்டின் நிதிமுறைகேடு தொடர்பான ஆதரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி சிவப்பு நிற டைரியை பேரவைக்கு எடுத்துச் சென்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது குறித்து பேரவைக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர குதா, காங்கிரஸ் தலைவர்கள் தன்னை பேரவைக்குள் அனுமதிக்காமல் வெளியே இழுத்து தள்ளியதாக கண்ணீர் மல்க பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் அதன் மூலம் ராஜேந்திர குதா கூறியது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், தன் கையில் இருக்கும் டைரியில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் நிதிமுறைகேடு தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் தன்னை அடித்து, உதைத்து டைரியை பறித்ததாக குற்றம் சாட்டியுள்ள அவர், வருமான வரித்துறை சோதனையின் போது முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் காங்கிரஸ் தலைவர் தர்மேந்திர ரத்தோரின் வீட்டில் இருந்து டைரியை பத்திரப்படுத்தியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், இன்று தன்னை சுமார் 50 பேர் சேர்ந்து தாக்கிய நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவை தலைவர் தன்னை பேசக் கூட அனுமதிக்கவில்லை எனவும் தான் பாஜகவில் இருப்பதாக அவர்கள் தன் மீது குற்றம் சாட்டுவதாகவும் ராஜேந்திர குதா தெரிவித்துள்ளார். மேலும் தன் மீதான தவறு என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் அவர் கேட்டுக்கொண்டார்.

2008 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் அரசாங்கத்தை தான் காப்பாற்றியதாகவும் ஆனால் அதை பொருட்படுத்தாமல் கெலட் தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார் எனவும் ராஜேந்திர குதா குற்றம் சாட்டினார். மேலும் பாலியல் குற்றவாளிகளுக்கும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என விமர்சித்த ராஜேந்திர குதா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்துகொண்டே குற்ற செயலில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

மேலும், அந்த டைரியின் சில பகுதிகள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்த ராஜேந்திர குதா, அதன் ரகசியங்களை வெளியிடுவேன் என அளும் அரசை மிரட்டியுள்ளார். அது மட்டுமின்றி, அந்த டைரியில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய பணத்தின் விவரங்கள் இருப்பதாகவும், அது லட்சங்களில் அல்ல 2 முதல் 5 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த டைரியை தர்மேந்திர ரத்தோர் எழுதியுள்ள நிலையில் அதில் முதலமைச்சர் அசோக் கெலட் மற்றும் அவரது மகன் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை கோர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள குதா, தான் செய்வது தவறு என்றால் இந்த தவறை மீண்டும், மீண்டும் செய்வேண் என முதலமைச்சர் மற்றும் அம்மாநில அரசாங்கத்தை மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் தொடர் அமளி! ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.