நாடாளுமன்ற பனிக்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லி பயணம் செய்துள்ளார்.
மாநில வளர்ச்சி, எல்லைப் பாதுகாப்பு படையில் எழுந்துள்ள மாற்றம் ஆகியவை குறித்து மம்தா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும் மம்தா சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளத்திலிருந்து(Janata Dal (United)) வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பவன் வர்மா மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்திய வெளியுறவுத்துறை உயர் அலுலவராக பணிபுரிந்துள்ள பவன் வர்மா(Pawan Varma IFS), பிகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாரின் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.
பின்னர் நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியிலிருந்து பவன் வர்மா வெளியேற்றப்பட்டார். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனப் பேச்சு அடிபட்டுவந்த நிலையில், தற்போது திரிணாமுல் காங்கிரசில் இவர் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு - பிரபல யூடியூபர் டாடி ஆறுமுகம் மகன் தலைமறைவு