ETV Bharat / bharat

Sharad Yadav: முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மரணம்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! - Loktantrik Janata Dal

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான சரத் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Jan 13, 2023, 8:20 AM IST

Updated : Jan 13, 2023, 11:04 AM IST

டெல்லி: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாக அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

1999 முதல் 2004 வரை மறைந்த பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் விமானப் போக்குவரத்து மற்றும் உணவு, பொதுவிநியோகத் திட்டங்கள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த சரத் யாதவ், 2017-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கமும் செய்யப்பட்டார்.

பின்னர், ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீது உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டபோது அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதனால்,லோக் தந்திரிக் ஜனதா தளம்(Loktantrik Janata Dal) என்ற கட்சியை துவக்கினார். ஆனால் சிறிது காலத்தில் மனம் மாறிய சரத் யாதவ் முந்தைய ஜனதா தளத்தின் பல்வேறு கிளைகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் எல்ஜேடியை ஆர்ஜேடி எனப்படும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைப்பதாக அறிவித்தார். இப்படி நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தீவிரமாக செயல்பட்டு வந்த சரத் யாதவுக்கு வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • Pained by the passing away of Shri Sharad Yadav Ji. In his long years in public life, he distinguished himself as MP and Minister. He was greatly inspired by Dr. Lohia’s ideals. I will always cherish our interactions. Condolences to his family and admirers. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) January 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே, சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டிவிட்டர் பக்கத்தில், "சரத் யாதவ் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் தனித்து விளங்கினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.

  • शरद यादव जी समाजवाद के पुरोधा होने के साथ एक विनम्र स्वभाव के व्यक्ति थे। मैंने उनसे बहुत कुछ सीखा है।

    उनके शोकाकुल परिजनों को अपनी गहरी संवेदनाएं व्यक्त करता हूं। देश के लिए उनका योगदान सदा याद रखा जाएगा।

    — Rahul Gandhi (@RahulGandhi) January 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் சரத் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதில், "சரத் யாதவ் ஜி சோசலிசத்தின் தலைவராக இருந்ததோடு, அடக்கமானவர், அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.

  • Deeply saddened by the passing away of RJD leader and former Union Minister Thiru. Sharad Yadav.

    We have lost one of the tallest socialist leaders who remained deeply committed to the ideals of democracy and secularism till his last breath.

    My heartfelt condolences.

    — M.K.Stalin (@mkstalin) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவ் மறைவால் மிகவும் வேதனையடைந்தேன். சோசலிச இயக்கத்தின் மிக உயரிய தலைவராக விளங்கியவர் சரத் யாதவ், தமது இறுதி மூச்சு வரையில் மக்களாட்சி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவராய் திகழ்ந்தார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Ramar Bridge case: ராமர் பால வழக்கில் கூடுதல் அவகாசம் - உச்ச நீதிமன்றம்

Last Updated : Jan 13, 2023, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.