ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு கடந்த 30ஆம் தேதி (மார்ச் 30) கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டது. 85 வயதான பரூக் அப்துல்லா மார்ச் 2ஆம் தேதி கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.
இரண்டாம் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் கோவிட்-19 பாதிப்புக்குள்ளான நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைபடி பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மகன் ஓமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என ஓமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைன் காதலனைத் தேடி கிராமத்திற்குச் சென்ற ஹை-டெக் காதலி: நெகிழ்ச்சி கதை!