அமராவதி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு நேற்று ஆந்திராவில் ஆளுங்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆந்திரா முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, துணை முதலமைச்சர் கே.நாராயண சுவாமி, மற்றும் மக்களவை உறுப்பினர் உறுப்பினர் பி மிதுன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சமூக இணையதள பக்கத்தில், "முதலமைச்சர் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் அம்பதி ராயுடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்" என கூறப்பட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில், “நான் ஆந்திர மக்களுக்கு சேவை செய்ய கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். அதற்கு முன் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்வேன்”. என கூறியுள்ளார்.
இந்திய அணிக்காக 100க்கும் மேற்பட்ட போட்டிகளிலும், ஐபிஎல்லில் 203 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். கடைசியாக கடந்த ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடு விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றது. அதனை தொடர்ந்து அம்பதி ராயுடு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தனது ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: பயிற்சி கழுகை பிடித்த பிஎஸ்எப் வீரர்கள்.. உளவு பார்க்க வந்ததா என விசாரணை!