ETV Bharat / bharat

இந்தியாவின் முன்னாள் கோல்கீப்பர் பாபு நாராயணன் காலமானார் - முன்னாள் கோல்கீப்பர் நாராயணன்

இந்தியாவின் முன்னாள் கால்பந்து கோல்கீப்பர் எஸ்.எஸ். பாபு நாராயணன் நேற்றிரவு (ஆகஸ்ட் 5) காலமானார். அவருக்கு வயது 86.

SS Narayan
SS Narayan
author img

By

Published : Aug 6, 2021, 8:22 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இந்தியாவின் முன்னாள் கோல்கீப்பர் எஸ்.எஸ். பாபு நாராயணன் காலமானார். இவர், 1956-1960 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, இந்திய அணியின் கோல்கீப்பராக இருந்துள்ளார். 1956ஆம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக்கில் யூகோஸ்லோவியாவுக்கு எதிராகத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து 1960ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற போட்டியிலும் முக்கியப் பங்கு வகித்தார். 1958ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்தாட்டத்தில் இந்தியாவிற்கு நான்காவது இடத்தைப் பெற்றுத் தந்தார்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவருக்கு விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: திரைப்பட விமர்சகர் ராஷித் இரானி காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.