ETV Bharat / bharat

விமான பணிப்பெண் தற்கொலை விவகாரம்: முன்னாள் ஹரியானா அமைச்சர் உள்பட இருவர் விடுதலை! - அருணா சதா

விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முன்னாள் ஹரியானா அமைச்சர் கோபால் கோயல் காண்டா (Gopal Goyal Kanda) மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரையும் டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது.

விமான பணிப்பெண் தற்கொலை விவகாரம்: முன்னாள் ஹரியானா அமைச்சர் உள்பட இருவர் விடுதலை!

author img

By

Published : Jul 25, 2023, 1:09 PM IST

டெல்லி: ஹரியானாவின் முன்னாள் அமைச்சராக இருந்தவர், கோபால் கோயல் காண்டா. இவரது உதவியாளர் அருணா சதா. கோபால் கோயல் காண்டாவுக்கு சொந்தமாக எம்எல்டிஆர் ஏர்லைன்ஸ் (MLDR airlines) என்ற விமான நிறுவனம் உள்ளது. இந்த விமான நிறுவனத்தில் கீதிகா ஷர்மா (Geetika Sharma) என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவர் வடமேற்கு டெல்லியில் உள்ள அசோக் விஹாரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அவரது வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்த நாளுக்கு முந்தைய நாள் (ஆகஸ்ட் 4, 2012) கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். அந்த கடிதத்தில், தான் பணிபுரிந்து வரும் விமான நிறுவனத்தின் உரிமையாளரும், அமைச்சருமான கோபால் கோயல் காண்டா மற்றும் அவரது உதவியாளர் அருணா சதா ஆகிய இருவரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரது மீதும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 506 (குற்றவியல் மிரட்டல்), 201 (ஆதாரங்களை அழித்தல்), 120 பி (குற்றச் சதி) மற்றும் 466 (ஏமாற்றுதல்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கீதிகா ஷர்மாவின் உடல் மீட்கப்பட்ட அதே நாளில் டெல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று அருணா சாதவை காவல் துறையினர் கைது செய்தனர். இதன் பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று அசோக் விஹார் காவல் நிலையத்தில் கோபால் கோயல் காண்டா சரண் அடைந்தார். தொடர்ந்து, மீண்டும் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக, டெல்லி விசாரணை நீதிமன்றம், காண்டா மீது 376 (பாலியல் வன்புணர்வு) மற்றும் 377 (இயற்கைக்கு மாறான பாலியல் உறவு) என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருந்தது. இதனால், தான் அப்போது பதவி வகித்து வந்த மாநில உள்துறை அமைச்சர் பதவியை கோயல் காண்டா ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டார்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 25) டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம், இந்த விவகாரத்தில் போதிய ஆதாரங்களை சமர்பிக்க மனுதாரர் தரப்பு தவறிவிட்டதாகக் கூறி இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. இந்த தீர்ப்பை சிறப்பு நீதிபதி விகாஸ் துல் வழங்கி உள்ளார். கோபால் கோயல் காண்டா, ஹரியானா லோகித் கட்சியின் நிறுவனர் ஆவார்.

மேலும், இவர் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சிர்ஸா தொகுதியில் வெற்றி பெற்று இருந்தார். இவர் நடத்தி வரும் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு தனது தந்தையின் பெயரான ‘முர்ளி தார் லாக் ராம்’ (Murli Dhar Lakh Ram) என்பதையே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காதலனுடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! கும்பலை தேடுவதில் போலீசுக்கு சுணக்கம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.