ETV Bharat / bharat

ரோஷ்னி நில முறைகேடு: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு! - DDC polls

ரோஷ்னி நில முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் தாஜ் மொகிதீன் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

CBI in Roshni land scam Congress leader Taj Mohiuddin Central Bureau of Investigation ரோஷ்னி நில முறைகேடு காங்கிரஸ் ரோஷ்னி தாஜ் மொகிதீன் சிபிஐ மெகபூபா முஃப்தி

author img

By

Published : Nov 27, 2020, 12:05 PM IST

ஸ்ரீநகர்: ரோஷ்னி நில முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் தாஜ் மொகிதீன் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தாஜ் மொகிதீன் மீது சோபியான் மாவட்டத்தில் 13 கானல் (கிட்டத்தட்ட 23.4 ஏக்கர்) நிலத்தை முறைகேடாக கையகப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் ஊழல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தாஜ் மொகிதீன் மீது சிபிஐ அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை தாஜ் மொகிதீன் மறுத்துள்ளார். இதன்மூலம், தனக்கு எதிரானவர்கள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ரோஷ்னி சட்டம் தொடர்பான முறைகேடுகள் புகார்கள் குறித்து விசாரிக்க ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் சிபிஐ -க்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் சிபிஐ அலுவலர்கள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதில் முதல் வழக்குப்பதிவாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் தாஜ் மொகிதீன் சிக்கியுள்ளார்.

முன்னதாக, “பாஜக அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது விசாரணை நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி துன்புறுத்துகிறது” என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவருமான மெகபூபா முஃப்தி விமர்சித்திருந்தார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், “இந்திய அரசாங்கம் தனது செல்ல (வளர்ப்பு) நிறுவனங்களான சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்திவருகின்றன. மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் ( DDC polls) தேர்தலை முன்னிட்டு அவர்களுக்கெதிரானவர்கள் வேட்டையாடப்படுகின்றனர். பாஜக உருவாக்கும் இந்த பொம்மலாட்டங்கள் மாயமாகும்” எனத் தெரிவித்திருந்தார்.

  • Kashmiri leaders are being harassed by GOI’s pet agencies like CBI,NIA & ED. They are being hounded & punished for participating in DDC polls. BJPs designs of foisting puppets & proxies has been derailed much to their chagrin. https://t.co/2eiZYaXhxY

    — Mehbooba Mufti (@MehboobaMufti) November 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (DDC polls) தேர்தலில் தாஜ் மொகிதீன் பாரமுல்லா மாவட்டத்தின் உரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது

ரோஷ்னி சட்டத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: “ரோஷ்னி திட்ட பயனாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை”- சயீத் ஷாநவாஸ் ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.