ETV Bharat / bharat

மாகடி ஏரிக்கு வலசை வந்த வெளிநாட்டு பறவைகள் - Gadag district news

பெங்களூரு: பருவநிலை மாற்றம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து மாகடி ஏரிக்கு அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிகின்றன. ஒரே இடத்தில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த பறவைகள் பறப்பதும், நீந்தி மகிழ்வதும் காண்போரை ரசிக்கத் தூண்டுகிறது. ஆகவே, மாகடி ஏரியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாகடி ஏரிக்கு வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்

author img

By

Published : Dec 10, 2020, 4:59 PM IST

பருவமழைக்குப்பின் கடும் குளிர் நிலவுவதால் உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளும் இடம்பெயர்வு ’வலசை போதல்’ என அழைக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தில் உள்ள ஷிராஹட்டியில் உள்ள மாகடி ஏரிக்கு, ஆஸ்திரேலியா, ஜப்பான், பாகிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு பறவையினங்கள் வரத் தொடங்கியுள்ளன. பார் ஹீட் கூஸ், பிராமணி டெக், இட்டால் கிப்ஸ், ரெட் டார்டா, மற்றும் பாயிண்டட் ஸ்பார்க் உள்ளிட்ட பறவைகள் தற்போது மாகடி ஏரி பகுதியில் உல்லாசமாக சுற்றித் திரிகின்றன.

ஒவ்வொரு குளிர்காலத்திலும் இங்கு வரும் இந்தப் பறவைகள் சுமார் மூன்று மாதங்கள் வரை தங்கிச் செல்கின்றன. இவை சுமார் 5 கிலோ எடை கொண்டவை. பழுப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய நிறத்தில் காணப்படுகின்றன. ஏரியைச் சுற்றியுள்ள விவசாயிகளின் நிலங்களில் சென்று வேர்க்கடலை, சூரியகாந்தி, சோளம் ஆகியவற்றை உண்டு பசியாறிக் கொள்கின்றன. இந்தப் பறவைகள் இரைக்காக மண்ணை மூன்று முதல் நான்கு முறை கிளறுவதால் மண்ணின் வளம் அதிகரிக்கும்.

மாகடி ஏரிக்கு வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்

ஏரிக்கு வரும் பறவைகளை அவ்வழியாகச் செல்லும் மக்கள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர். கழிவறை, இருக்கைகள், உணவகங்கள் என ஏரியை சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாத்தளம் போல மேம்படுத்தினால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.