ஹிமாச்சலப் பிரதேசம்: ஹிமாச்சலப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் சாதி அடிப்படையில் தனித்தனியாக உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் சாதி அடிப்படையில் உணவு வழங்குவது குறித்து ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தலித் ஷோக்னா முக்தி மஞ்ச், பீம் ஆர்மி உள்ளிட்ட அமைப்புகள் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞரிடம் ஈடிவி பாரத் செய்தியாளர்கள் கேட்டபோது, "இந்த வீடியோ ஷில்லை பகுதியில் கடந்த 12-ம் தேதி நடந்த திருமண விழாவில் எடுக்கப்பட்டது. அனைவரும் ஒன்று என்று நாம் கூறிக் கொள்கிறோம். ஆனால் அது உண்மை அல்ல.
இங்கு ரொட்டி கூட சாதி அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. எங்கள் பகுதிகளில் இன்னமும் சாதி தீண்டாமைகள் நடந்து வருகின்றன. பண்டிகைகள் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் அனைவரும் சாதி, மத பேதங்களை மறந்து ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: தாயின் சடலத்தை டிரம்மில் போட்டு அடக்கம் செய்த மகன்!