டெல்லி: அடர்ந்த கடும் பனிமூட்டத்தினால், இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 40 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுள்ளன.
நள்ளிரவு 1:30 மணி முதல் காலை 7 மணிவரை இந்த அடர்ந்த பனிமூட்டம் நிலவியதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி விமான நிலையம் உயர்தர கேட் 3 ஐஎல்எஸ் தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டது. இதன்மூலம் 50 மீட்டர் இடைவெளியில் ஓடுதள பாதையைக் காணும் திறன் இருந்தாலே, விமானங்களைத் தரையிறக்க முடியும்.
சிக்னலுக்கு தாவும் பயனர்கள்... சரண்டர் ஆன வாட்ஸ்அப்!
இந்த வருடம், இதுபோன்ற சமயங்களில் விமானங்களைச் செலுத்த, புதிய விமான போக்குவரத்து கோபுரம், உயர்தர படக்கருவிகள், சமூக வலைதள கட்டளை மையம் ஆகியன டெல்லி விமான நிலையத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. எனினும் இன்றைய பனிமூட்டத்தின் அளவு அதிகரித்திருந்ததால், விமானங்கள் தாமதமானதாக அலுவலர்கள் கூறியுள்ளனர்.