ஹைதராபாத்: உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பஞ்சாப்பை ஆம் ஆத்மியும், உத்தரப் பிரதேசத்தை பாஜகவும் கைப்பற்றும் என்று வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பாஜகவை சேர்ந்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மூவரும் தங்களது தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
இதற்கு மாறாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கதிமா, பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தங்களது தொகுதியில் தொடர்ந்து பின்னடைவில் உள்ளனர். இருப்பினும், உத்தரகாண்ட்டில் பாஜக முன்னிலையில் உள்ளது. அதேபோல பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.
இதையும் படிங்க: ஐந்து மாநிலங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை