ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 5 பேரை கும்லா மாவட்ட காவல் துறையினர் நேற்று (டிச.26) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பணமோசடியில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்.பி.ஜனார்த்தனன் தெரிவித்தார். இவர்களுடன் இணைந்து செயல்பட்ட சிலர் தப்பியோடியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் வீரரின் உடல்