ETV Bharat / bharat

கூண்டோடு காலியாகும் திரிணாமுல் காங்கிரஸ்...பாஜகவை நோக்கி செல்லும் எம்எல்ஏக்கள்! - திரிணாமுல் காங்கிரஸ்

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஐந்து எம்எல்ஏக்கள், பாஜகவில் இணைந்துள்ளனர்.

மோடி
மோடி
author img

By

Published : Mar 8, 2021, 8:43 PM IST

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைவது அக்கட்சிக்கு கடும் நெருக்கடியை அளித்துள்ளது. இன்று, மேலும், ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

மேற்குவங்க பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ், மூத்த தலைவர்கள் சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகியோர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களான சோனாலி குஹா, ரவீந்திரநாத் பட்டாச்சார்யா, ஜட்டு லஹிரி, தீபேண்டு பிஸ்வாஸ், சிதல் சர்தார் ஆகியோர் அக்கட்சியில் இணைந்தனர்.

நான்காவது முறையாக எம்எல்ஏவான சோனாலி குஹா, நீண்ட நாள்களாக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவிற்கு நெருக்கமாக இருந்தவர். இடதுசாரிகளை வீழ்த்த காரணியாக அமைந்த சிங்குர் இயக்கத்தின் முக்கிய முகமாக கருதப்பட்டவர் ரவீந்திரநாத் பட்டாச்சார்யா. இவர்கள் அனைவருக்கும் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'சர்வதேச ஆண்கள் நாளும் கொண்டாடப்பட வேண்டும்' - பாஜக பெண் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.