கோழிக்காடு முகம்மது சாஹிர், நசீர், ஜுபைர், அசைனர், தஹிர் ஆகிய ஐந்து பேரும் இன்று (ஜூன்.21) காலை விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில், ராமநாட்டுக்காரா எனும் பகுதியில் லாரி ஒன்றின் மீது இவர்கள் சென்று கொண்டிருந்த கார் மோதி நொறுங்கியது.
இதில், சம்பவ இடத்திலேயே ஐந்து பேரும் உயிரிழந்த நிலையில், காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்